தமிழக அரசின் அனுமதி பெற்ற இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் .
அல்லது வீட்டிலிருந்து குடிமக்கள் பயனாளர் நுழைவு மூலம் பயனர் கணக்கு துவங்கி நீங்களே விண்ணப்பிக்கலாம் .
தேவையான ஆவணங்கள்
- புகைப்படம்
2.ஆதார் அட்டை - குடும்ப அட்டை
- விண்ணப்பதாரருக்கு ஏற்கனவே தமிழக அரசால் வழங்கப்பட்ட ஜாதிச்சான்றிதழ் இருந்தால் அதை சமர்ப்பிக்கலாம் .
- இப்போதுதான் முதல் முறை விண்ணப்பிக்கப்படுகிறது என்றால் தாய் அல்லது தந்தையின் ஜாதிச்சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
- SC /ST பிரிவினராக இருந்தால் தந்தையின் அசல் ஜாதிச்சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் .தாயின் ஜாதிச்சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படாது
- சுய ஒப்புதல் கடிதம் (இந்த சான்றிதழ் இ சேவை மையம் மூலம் வழங்கப்படும் )
விண்ணப்பித்து 7 முதல் 15 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்படும்