முதல் பட்டதாரி சான்று ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி ?

முதல் பட்டதாரி சான்று ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி ?

உங்கள் குடும்பத்தில் தாய் வழியிலும் , தந்தை வழியிலும் இதுவரை யாரும் பட்டப்படிப்பு படிக்கவில்லை என்றால் நீங்கள் முதல் பட்டதாரி சான்று விண்ணப்பிக்கலாம் .

தேவையான ஆவணங்கள்

  1. விண்ணப்பதாரரின் புகைப்படம் .
  2. ஆதார் அட்டை
  3. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று
  4. தாய் மற்றும் தந்தையரின் 10 அல்லது 12 ஆம் வகுப்பு மாற்றுச்சான்றிதழ்
  5. விண்ணப்பதாரரின் உடன் பிறந்த மூத்த சகோதரர் அல்லது சகோதரி 10 அல்லது 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு மேற்படிப்பு தொடராமல் இருந்தால் அவர்களுடைய மாற்றுச்சான்றிதழ்
  6. விண்ணப்பதாரரின் உடன் பிறந்த இளைய சகோதரர் அல்லது சகோதரி யாரேனும் படித்துக்கொண்டிருந்தால் அவர்களுடைய பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்புதல் பெற்ற பள்ளி ஆவணச்சான்று ()
  7. குடும்ப அட்டை
  8. ஏதேனும் வழக்கறிஞரிடம் குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை என்று AFFIDAVIT பெற்று அதனையும் சமர்ப்பிக்க வேண்டும் .
  9. தாய் தந்தையரின் சுய ஒப்புதல் கடிதம்
  10. விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம்

விண்ணப்பிப்பது எப்படி?

  1. https://www.tnesevai.tn.gov.in/ என்ற வலைதளத்தில் உள்நுழையவும்
  2. DEPARTMENT பகுதியில் REVENUE DEPARTMENT என்பதை தேர்வு செய்யவும்.

இப்போது தோன்றும் திரையில் REV -104 – FIRST GRADUATE CERTIFICATE என்பதை தேர்வு செய்யவும்.

3.PROCEED பொத்தானை கிளிக் செய்யவும் .

  1. இப்போது தோன்றும் திரையில் குடிமக்களுக்கென இ சேவைக்காக CAN எண் உருவாக்க வேண்டும் . அல்லது உங்களுக்கு ஏற்கனவே CAN எண் இருந்தால், ஆதார் எண்ணை உள்ளிட்டு CAN எண்ணை பெற முடியும் .
  2. பிறகு உங்கள் கேன் எண்ணை தேர்வு செய்து அலைபேசி எண்ணை பயன்படுத்தி ஒரு முறை கடவுச்சொல்லை சமர்ப்பிக்கவும் . இப்போது புதிய திரை தோன்றும் .
  3. இத்திரையில் கல்வி விவரங்கள், விண்ணப்பதாரர் விவரங்கள், முகவரி விவரங்கள் , தொடர்பு விவரங்கள், குடும்ப உறுப்பினர் விவரங்கள், மற்றும் தற்போதைய கல்வி விவரங்கள் ஆகியவற்றை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும் .
  4. இப்போது தோன்றும் திரையில் வரிசையில் கூறியுள்ளபடி ஆவணங்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்யவும்
  5. இப்போது MAKE PAYMENT பொத்தானை கிளிக் செய்து பணம் செலுத்தவும் .
  6. பின் உங்கள் விண்ணப்பத்திற்கான ஒப்புகை சீட்டு தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தின் எண்ணை வைத்து விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ளவும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *